உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் திருட்டு: போலீசில் புகார்

பைக் திருட்டு: போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடை முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய ஆசாமிக்கு போலீசார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலை பகுதியை சேர்ந்த சேகர் மகன் நாகராஜ்,50; இவர் தனக்கு சொந்தமான பைக்கினை கடந்த 9-ம் தேதி மாலை 6:40 மணிக்கு கள்ளக்குறிச்சி செக்குமேட்டுதெருவில் ஒரு கடை முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கிருந்த அவரது பைக் காணவில்லை. பைக்கின் மதிப்பு ரூ.55 ஆயிரம் ஆகும். இதுகுறித்து புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து பைக் திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை