உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது

சங்கராபுரம் பகுதியில் பைக் திருடியவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து போலீசார் 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் செம்பராம்பட்டு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக பைக்கில் வந்த சந்தேக நபரை பிடித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.இதில் பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரை சேர்ந்த சிவராமன் மகன் ராஜேஷ்,42; என்பதும், இவர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் பகுதிகளில் பைக்குகளை திருடி, பதுக்கி வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு பிறகு ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது சேலம், முசிறி, வந்தவாசி, தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை