உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது பஸ் மோதல் டிரைவர் இறப்பு

பைக் மீது பஸ் மோதல் டிரைவர் இறப்பு

கள்ளக்குறிச்சி: பைக்கில் சென்ற டிரைவர், பஸ் மோதி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் சிவா,33; கார் டிரைவர். இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு இந்திலியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி, தேசிய நெடுஞ்சாலையின் எதிர்திசையில் பைக்கில் சென்றார். உலகங்காத்தானில் சாலையை கடக்க முயன்றபோது, கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம் நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியது. அதில், படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை