உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய், மகனை தாக்கிய வார்டு உறுப்பினர் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய வார்டு உறுப்பினர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: செல்லியம்பாளையத்தில் தாய், மகனை தாக்கிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வரஞ்சரம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி மாணிக்கம், 55; கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி பொது குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.அங்கு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வெங்கடேசன், 65; என்பவர் குழாயில் பைப் பொருத்தி, வாழை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சியுள்ளார். அப்போது குடிநீர் பிடித்துக்கொள்வதாக மாணிக்கம் கூறியபோது, மறுத்து தகராறு செய்து, மாணிக்கம் மற்றும் அவரது மகன் சம்பத் ஆகிய இருவரையும் வெங்கடேசன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், வெங்கடேசன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ