உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பத்தாம் வகுப்பு மாணவரின் சான்றிதழில் குழந்தை படம்

பத்தாம் வகுப்பு மாணவரின் சான்றிதழில் குழந்தை படம்

பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது இர்பான், 15, புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். அவரை பண்ருட்டியில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கு, கடந்த 22ம் தேதி முகமது இர்பானுடன் பள்ளிக்கு சென்ற முகமதுயூசுப், தன் மகனின் மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை வாங்கினார். பள்ளி அலுவலக ஊழியர்கள் வழங்கிய மாற்றுச் சான்றிதழில், முகமது இர்பான் புகைப்படத்திற்கு பதிலாக பெண் குழந்தையின் படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது யூசுப், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார்.உடன், அங்கிருந்த அலுவலக ஊழியர்கள், முகமது யூசுப் வைத்திருந்த மாற்றுச் சான்றிதழை பிடுங்கி கிழித்து எரிந்து விட்டு, 'ஆன்லைன் பதிவேற்றத்தில் தவறு நடந்துள்ளது. வேறு மாற்று சான்றிதழ் தருகிறோம்' என கூறி, முகமது யூசுப்பை அனுப்பி வைத்தனர்.இதையடுத்து முகமது இர்பான் படத்துடன் கூடிய சான்றிதழை நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை