உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முறையாக குடிநீர் வழங்காதது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாலை 6:00 மணிக்கு சேராப்பட்டு மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதைத் தொடர்ந்து, 6:30 மணியளவில் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்