| ADDED : ஜூன் 02, 2024 05:30 AM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தி.மு.க., முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கனின் மூன்றாமாண்டு நினைவு நாள் பகண்டைகூட்ரோட்டில் நடந்தது.இதையொட்டி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மறைந்த பாண்டுரங்கனின் படத்தை திறந்து வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் துரைமுருகன், பெருமாள், பாரதிதாசன், அசோக்குமார், நிர்வாகி சாமிசுப்ரமணியன், நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் கோபி, நிர்வாகிகள் ராஜூ, சண்முகம், கணேசன், செந்தில், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.