உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிரிட்ஜ் வெடித்து பொருட்கள் சேதம்

பிரிட்ஜ் வெடித்து பொருட்கள் சேதம்

ரிஷிவந்தியம் : காட்டுஎடையாரில் பிரிட்ஜ் வெடித்து சிதறிய விபத்தில், நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் தீயில் கருகின.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் அண்ணாதுரை,45; இவரது வீட்டிலிருந்த பிரிட்ஜ் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.இதில் வீட்டின் மேற்புற ஷீட் கூரை உடைந்து சேதமடைந்ததுடன், தீ பரவியது. இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம், சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை