உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எஸ்.ஒகையூரில் நாய் கடித்து மான் பலி

எஸ்.ஒகையூரில் நாய் கடித்து மான் பலி

கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் நாய் கடித்து புள்ளி மான் இறந்தது.தியாகதுருகம் அடுத்த எஸ்.ஒகையூர் வனப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே, புள்ளி மான் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையிலிருந்து வனக்காப்பாளர் ராஜ்குமார், சு.ஒகையூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் நதியா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.அங்கு, நாய் கடித்ததில் 1 வயது கொண்ட ஆண் மான் இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோனைக்கு பிறகு மகரூர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ