உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகம், சேலம் சாலைகள் விரிவாக்கம் செய்ய கோரிக்கை

தியாகதுருகம், சேலம் சாலைகள் விரிவாக்கம் செய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம், சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாக கள்ளக்குறிச்சியை வெளியூர்களுடன்இணைக்கும் சங்கராபுரம், கச்சிராயபாளையம் ஆகிய இரு மாநில நெடுஞ்சாலைகள் நகருக்கு வெளியே அகலப்படுத்திபேரிகார்டுகள் அமைத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.ஆனால், கள்ளக்குறிச்சி நகரின் மிக முக்கிய சாலைகளான தியாகதுருகம் மற்றும் சேலம் சாலைகள் அகலப்படுத்தப்படாமல்உள்ளது.இந்த இரண்டு சாலைகளும் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகம் கொண்ட, மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது.சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சேலம், ஈரோடு, கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைக்கும் இந்த சாலைகள் இரண்டும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகள் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மின் கம்பங்களும் சாலையை ஆக்கிரமித்துள்ளன. மேலும், அங்குள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள் என சாலையை ஆக்கிரமித்துள்ளன.ஆனால், இந்த இரண்டு சாலைகள் வழியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள், பொதுமக்கள் அதிகளவில்பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுக்கு முன் சாலைகளை அகலப்படுத்தப் போவதாக கூறி சாலையை சற்றே உயர்த்தியதுடன் விரிவாக்கம் செய்யாமல்விட்டனர்.மேலும் கள்ளக்குறிச்சி நகரின் மத்தியில் நான்கு முனை சந்திப்பு பகுதியையொட்டி பஸ் நிலையமும் அமைந்துள்ளதால்பஸ்கள் சுலபமாக சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். அத்துடன் சேலம் சாலை, தியாகதுருகம் சாலையோரங்கள் முழுமையும், வரிசையான வாகன அணிவகுப்புகள், வணிக நிறுவனங்களின்ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுக் கிடக்கின்றன.எனவே இந்த 2 சாலைகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்திட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்கும் விதமாக தியாகதுருகம் மற்றும் சேலம் சாலைகளை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைத்து மேம்படுத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி