| ADDED : ஜூலை 22, 2024 01:08 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நேற்று மாலை இந்து கோவில்களை சீரழிக்கும் தமிழக அரசே, கோவில்களை விட்டு வெளியேறு, கட்டண தரிசனத்தை ரத்து செய் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.பொருளாளர் அருண், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், துணைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார்
பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.