உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தமிழக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: பா.ஜ., அண்ணாமலை தகவல்

தமிழக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: பா.ஜ., அண்ணாமலை தகவல்

உளுந்துார்பேட்டை : 'கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்குதான் அதிக உயிர் பலிக்கு காரணம்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி நகராட்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அவர், கூறியதாவது; இறந்தவரின் குடும்பத்திற்கு பா.ஜ., சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் நாளை (இன்று) வழங்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, மேலும், என்ன செய்ய வேண்டும் என ஆய்ந்து உதவிகள் செய்து தரப்படும்.மாவட்ட தலைநகரத்தின் மைய பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு தான் அதிக உயிர் பலிக்கு காரணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சம்பவத்தை மூடி, மறைப்பதற்கு முனைப்பு காட்டினர்.தகவல் அறிந்தவுடன், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் பொது மக்களிடம் எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். எச்சரிக்க தவறியதே அதிக உயிர்கள் பலி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. நாளை மறுநாள் தமிழக முழுதும் பா.ஜ.., சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்