| ADDED : ஜூலை 19, 2024 05:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட உயர்மின் கோபுர ஒருங்கிணைப்புக்குழு சார்பில், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் சுப்ரமணி, சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் ஸ்டாலின்மணி, தரணி சர்க்கரை ஆலை செயலாளர் அருள்தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ரகுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைத்ததால், சாகுபடி செய்த பயிர்கள், துறவு கிணறு, ஆழ்துளை கிணறு, மின் கம்பம் மற்றும் மின் கம்பி செல்லும் இடங்கள் என பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். பின், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.