உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விக்கிரவாண்டி பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., அடிதடி

விக்கிரவாண்டி பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., அடிதடி

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நாளையுடன் பிரசாரம் முடிவதால் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் தி.மு.க.,வினர், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே திரண்டிருந்தனர்.அங்கு, நாம் தமிழர் கட்சியினர் நின்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது, ஆளும் தி.மு.க.,வை பற்றி, நா.த.க., நிர்வாகிகள் தாக்கி பேசினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் தட்டிக்கேட்டதால், இரு கட்சியினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை