மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
6 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
6 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
9 hour(s) ago
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே ஸ்கூட்டி மீது கார் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்,63; இவர் நேற்று முன்தினம் பகல் 2.30 மணிக்கு தனது ஸ்கூட்டி வாகனத்துடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே.ஆர்., கடையின் அருகே சாலையோரம் நின்றிருந்தார். அப்போது பின்னாள் வந்த இனோவா கார், ஸ்கூட்டி மீது மோதியது.இதில் படுகாயமடைந்த தியாகராஜனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் இனோவா கார் டிரைவர் உசலம்பட்டி சேர்ந்த முத்தையா மகன் ரமேஷ்,35; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago