உள்ளூர் செய்திகள்

சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 2,300 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, வண்டகப்பாடி மேற்குமலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 8 பேரல்களில் இருந்த 2,300 லிட்டர் சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர். மேலும், இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சன் மகன் ஜெயராஜ் என்பவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை