மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
10-Oct-2025
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா
09-Oct-2025
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
09-Oct-2025
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லுார் அடுத்த தண்டரை கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் லியோ சார்லஸ், ராஜமன்னார் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தண்டரை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் நிலத்தின் அருகே இருக்கும் கல்இடுக்கில் ஐந்து பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதனை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து சாராய ஊறல் போட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
10-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025