உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சூளாங்குறிச்சியில் கண் பரிசோதனை முகாம்

சூளாங்குறிச்சியில் கண் பரிசோதனை முகாம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமிற்கு, ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவகல்லுாரி டாக்டர்கள் கீதனா, கிருபாசங்கர், செவிலியர் ரேவதி ஆகியோர் பரிசோதனை செய்தனர்.முகாமில், 100க்கும் மேற்பட்ட கண் குறைபாடுடையவர்கள் பங்கேற்றனர். கண்புரை, பார்வை குறைபாடு, ஒற்றை தலைவலி, கண் நீர் அழுத்த நோய் உட்பட கண் சார்ந்த பிரச்னைகளுக்கு மாத்திரை, மருந்து வழங்கப்பட்டது.பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி அணியுமாறும், கண்புரை பிரச்னை உள்ள வர்களுக்கு ஆப்ரேஷன் செய்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது. கிராம உதவியாளர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை