உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் பிரபல சாராய வியாபாரியை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த ராமசேசபுரம் சேர்ந்தவர் அருள், 35; இவர் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து சின்னசேலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரின் இது போன்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, இவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத் சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில் கலெக்டர் பிரசாந்த், சாராய வியாபாரி அருளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்கனவே சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி கிளை சிறையில் இருக்கும் அருளை, சின்னசேலம் போலீசார் கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !