தியாகதுருகம்: தி.மு.க., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பொன் ராமகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணன். இவர் முன்னாள் தென்னாற்காடு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்தவர். இவரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மவுண்ட் பார்க் மழலையர் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஒன்றிய செயலாளர் சதா மகாலிங்கம், மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி சேர்மன் அரவிந்தன், முரசொலிமாறன், விசு, ஜோதி, மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜசேகர், கோபால், சிலம்பரசன் முன்னிலை வகித்தனர்.பொன் ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பள்ளி இயக்குனர்கள் வடிவேல், பழனி, முத்துகிருஷ்ணன், தனமூர்த்தி ஐ.டி.ஐ., தாளாளர் பழனிவேல், கூட்டுறவு சங்க செயலாளர் பாலாஜி, கேசவன், வெங்கடேசன், ஆறுமுகம், அப்துல் சர்தார், சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் சுஜாதா, தலைமை ஆசிரியை டயானா, துணை முதல்வர்கள் முத்துக்குமரன், வினோதினி, மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, ரத்தினவேல், செல்வம், சசி, மூர்த்தி, முரளி, மோகன், அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.