| ADDED : ஆக 19, 2024 12:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மர சிற்ப கலைஞர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி விருக் ஷா கூட்டமைப்பு சார்பில் நடந்த முகாமில், டாக்டர் சத்தியசீலன் தலைமையிலான டாக்டர்கள் அஜித்தா, ராகேஷ், சித்ரா, மைனாவதி சிகிச்சை அளித்தனர்.கள்ளக்குறிச்சி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முகாமில் 100க்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்புரை பரிசோதனை, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.முகாமில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் விக்னேஸ்வரன், பாலா, வசந்தன், கவியரசன், கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா, ஆய்வக நிபுணர் கவிதா, நகராட்சி களப்பணியாளர் மகேஸ்வரி மற்றும் நகர சுகாதார தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.