உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு மையம்: கலெக்டர் ஆய்வு

மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு மையம்: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதியோருக்கான பராமரிப்பு மையத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் சீமாங் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆதரவற்ற முதியோர் மற்றும் வயது முதிர்ந்தோர் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் ஆதரவற்ற முதியோர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளித்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இம்மையத்தின் செயல்பாட்டுகளை கலெக்டர் பிராசந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வில், பராமரிப்பு மையத்தில் உள்ள நபர்களின் விவரம், வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதி, மனநலம் சார்ந்த ஆலோசனை, பராமரிப்பு முறைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பராமரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக வசதிகள் மற்றும் தேவைப்படும் நிரந்தர வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பராமரிப்பு மையத்திற்கு தேவையான இதர வசதிகள் ஏற்படுத்தி தீர்வு காணும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின்னர் பராமரிப்பு மையத்திற்கான அனைத்து வசதிகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை