உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது

15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு அருகே குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூரியா மற்றும் போலீசார் அத்தியூர் - ஜம்பை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகொள்ளியூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.அதில் அவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த பழனி, 55; என்பதும், தனது மளிகைக் கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது.உடன், பழனியை கைது செய்து, அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை