உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அதிகரிக்கும் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை அரகண்டநல்லுாரில் அதிரடி நடவடிக்கை தேவை

அதிகரிக்கும் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை அரகண்டநல்லுாரில் அதிரடி நடவடிக்கை தேவை

அரகண்டநல்லுார் காவல் சரக எல்லையில் மணல் கடத்தல், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரகண்டநல்லுார் காவல் சரகத்தில் மணம்பூண்டியில் துவங்கி, ஆற்காடு, அருளவாடி வரை தென்பெண்ணை ஆற்றையொட்டி தேவனுார், கீழக்கொண்டூர், வீரசோழபுரம், ஆற்காடு என பல்வேறு கிராமங்களில் பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பல கிராமங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறையும், வருவாய்த் துறையும் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல் படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கு ஆதாரமாக தேவனுாரில் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் மணலே சாட்சியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் தேவனுார், நாயனுார், ஆற்காடு, வசந்த கிருஷ்ணாபுரம், பில்ராம்பட்டு, அரகண்டநல்லுார் பச்சையம்மன் கோவில் பகுதி என கஞ்சா விற்பனையும் போலீசாரால் தடுக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.மணல் கடத்தல், கஞ்சா விற்பனைக்கு முக்கியத்துவம் அளித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை