உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கல்வியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார், முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ராமு வரவேற்றார். பேராசிரியர் தேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் மற்றும் கல்வி பணி, நலத்திட்டங்கள், மதிய உணவு திட்டம் குறித்து பேசினர். தொடர்ந்து, காமராஜர் பற்றி பேச்சு, கவிதை, பாடல் போட்டி நடந்தது. பேராசிரியர்கள் செல்வம், பிரபாகரன், சிவராமன், அண்ணாகலியன், அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியை தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ