உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கபிலர் விழா 19ம் தேதி துவக்கம்

கபிலர் விழா 19ம் தேதி துவக்கம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின் 47ம் ஆண்டு கபிலர் விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் வரும் 19ம் தேதி 47ம் ஆண்டு கபிலர் விழா துவங்குகிறது. திருக்கோவிலுார் சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, காலை 8:30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு, 10:00 மணிக்கு பண்பாட்டுக் கழக செயலாளர் கோடிலிங்கம் இறை வணக்கம், 10:30 மணிக்கு பண்பாட்டு கழக செயலாளர் தனபால் வரவேற்கிறார்.ஜீயர் தேகளீச ராமானுஜாச்சார்யார் சுவாமிகள் விழாவை துவக்கி வைக்கிறார். மாலை 6:00 மணிக்கு பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் பேராசிரியர் சுந்தரம், புலவர் ராமலிங்கம் பேசுகின்றனர். அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார்.20ம் தேதி காலை 10:30 மணிக்கு 'கப்பலின் கண்ணீர்' தலைப்பில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, 'கரிசல் மண் தரிசனம்' தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்று கின்றனர். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் கார்த்திகேயன் தலைமை தாங்குகிறார்.மாலை 5:00 மணிக்கு தமிழ் அறிஞர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். நகராட்சி சேர்மன் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.தொடர்ந்து நடைபெறும் கபிலர் விருது வழங்கும் விழாவிற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கி, முனைவர் பிரேமா நந்தகுமாருக்கு 'கபிலர் விருது' வழங்குகிறார். தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பாராட்டுரை வழங்குகிறார். 21 ம் தேதி காலை 10:30 மணிக்கு 'சங்கத் தமிழ் அரங்கம்' நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு ரவிக்குமார் எம்.பி., தலைமையில் சைவத்த தமிழரங்கம் நடக்கிறது. தொடர்ந்து பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் நடுவராக அங்கம் வகிக்க, 'சங்க இலக்கியங்களில் பெரிதும் விஞ்சி நிற்பது' காதலா! ஈதலா! வீரமா! தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் சுப்ரமணியன் நன்றி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ