உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குலதீபமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

குலதீபமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கோவிலூர், : குலதீபமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் சிறப்பு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்ட கரகம் புறப்பாடாகியது. தொடர்ந்து திரவுபதி அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி கோவில் வளாகத்தில் தீக்குண்டத்தில் எழுந்தருளினர். பின்தொடர்ந்த வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ