உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் சட்ட திருத்தங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜெய்முருகன், இணை செயலாளர் இளையராஜா, நுாலக பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதிநியாயம் ஆகிய மூன்று புதிய சட்ட திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி