| ADDED : மே 12, 2024 05:59 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.இப்பள்ளியில் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ரேவதி பிரதா 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றார்.இவர் பாடம் வாரியாக தமிழ் 95, ஆங்கிலம் 98, அறிவியல் 96, சமூக அறிவியல் 99 மதிப்பெண்ணும், கணித்தில் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து மாணவர் பேரறிவன் 459, ஈஸ்வர் 449 மதிப்பெண் பெற்றனர்.சாதனை படைத்த மாணவர்களை தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார் சீனியர் முதல்வர் கலைச்செல்வி, பள்ளி முதல்வர் முத்துக்குமரன், துணை முதல்வர் வினோதினி உடன் இருந்தனர்.