உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை செல்லும் சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக அண்ணா நகர் பகுதிகளில் அறிவிப்பு இல்லாமல் வீடுகளை அகற்றி வருகின்றனர்.அண்ணா நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் அளவீடு செய்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஊராட்சித் தலைவர் தான் சர்வீஸ் சாலை தேவை எனக்கூறியதாக பொதுமக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை 11 மணியளவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் நேரில் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர்.பின்பு ஊராட்சித் தலைவர் பரமசிவம் பகல் 1 மணிக்கு வந்து பொதுமக்களிடம் பேசும்போது சர்வீஸ் சாலை போட நான் அனுமதி தரவில்லை, மேலும் இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் போராட்டத்தில் நானும் உங்களுடன் பங்கேற்கிறேன் என கூறினார். இதற்கு பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பதற்றமாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ