உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாடியில் இருந்து விழுந்த என்.எல்.சி., ஊழியர் சாவு

மாடியில் இருந்து விழுந்த என்.எல்.சி., ஊழியர் சாவு

உளுந்துார்பேட்டை: நெய்வேலியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்,57; என்.எல்.சி.,யில் சீனியர் டெக்னீஷியனான இவர், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகரில் நடந்த கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தார். அங்கு அவர் நேற்று காலை தனது வீட்டின் முதல் மாடிக்கு சென்றபோது கீழே விழுந்தார்.அதில் படுகாயமடைந்த அவரை, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ