உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.சேலம் மாவட்டம், சித்தேரியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 60; இவரது மனைவி காளியம்மாள், 55; இருவரும் டி.வி.எஸ்., மொபட்டில் சின்னசேலம் சென்றனர். மூங்கில்பாடி அருகே புறவழிச்சாலையை கடந்த போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், பெரியசாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.இதில் காயமடைந்த பெரியசாமி, காளியம்மாள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை