உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் அரிசி கடத்தல் ஒரு டன் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் ஒரு டன் பறிமுதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, ஒரு டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், மேப்புலியூர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் ரவி, 30; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, ஒரு டன் ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை