| ADDED : மே 11, 2024 05:15 AM
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஆனந்த், சுப்ரமணியன், ரவி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார்.கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களிடம் சந்தா தொகை வசூலித்தல். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்கினை வாசித்தல். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயரில் வங்கி கணக்கினை மாற்றம் செய்து வரவு மற்றும் செலவு மேற்கொள்ளுதல்.இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள ஊராட்சி செயலாளர் சுப்ரமணியனுக்கு பாராட்டு விழா நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய நிர்வாகி சண்முகம் நன்றி கூறினார்.