உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதம்

அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதம்

கச்சிராயபாளையம் : ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நடந்த கலந்தாய்வில் பெற்றோர்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினத்தில் இயங்கும் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர்களை சேர்க்க 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.விண்ணப்பித்த மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதற்கான பெற்றோர்களை பள்ளிக்கு நேற்று அழைத்திருந்தனர்.பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அங்கு வந்த அரசு அதிகாரிகள் பள்ளியைச் சுற்றி ஒரு கி.மீ., தொலைவில் உள்ள மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வதாக அறிவித்தனர்.மேலும் மற்றவர்களை வெளியே செல்லும்படியும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் 34 இடங்களைக் கொண்ட விவேகானந்தா பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி