உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை கடைக்கு அபராதம்

குட்கா விற்பனை கடைக்கு அபராதம்

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சின்னசேலம் பஸ் நிலையம் மற்றும் பள்ளியின் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்பாக சுகாதார துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. சின்னசேலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா ஆகியோரது தலைமையில் சோதனை செய்தனர். அதில் பள்ளியின் அருகே புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். கடையின் உரிமையாளர்களையும் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை