உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சாதனை

கள்ளக்குறிச்சி: தச்சூர் ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர் சஞ்சய் 500க்கு 491, மாணவி ஹாசினி பிரியா மற்றும் மாணவர் ரித்விக் ஸ்ரீரங் 484, விபூஷன் 482 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். குறிப்பாக, மாணவ, மாணவிகள் 10 பேர் வெவ்வேறு பாடங்களில் சென்டம் மதிப்பெண் பெற்றனர்.பிளஸ் 2 மாணவி சுனிதா சவுத்ரி 500க்கு 491, இன்சுவை 478, அக்ஷ்யபாரதி 471 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ் ரெக்சி ஆகியோர் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை