உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மோசடி செய்து நிலத்தை பெற்ற மகன் மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் மனு

மோசடி செய்து நிலத்தை பெற்ற மகன் மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் மனு

கள்ளக்குறிச்சி : பிரிதிவிமங்களத்தில் மோசடி செய்து நிலத்தை பெற்ற மூத்த மகன் மீதும், அதை வாங்கியவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில், தந்தை மனு அளித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்களத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 65; தனது மனைவி, மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:பிரிதிவிமங்களம் கிராம எல்லையில் 99 சென்ட் பூர்வீக நிலத்துடன் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராதாகிருஷ்ணன் வங்கியில் நிலத்தை அடகு வைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வீட்டுக்கடனை அடைத்து விடலாம், தம்பி விமல்ராஜ்க்கு அரசு வேலை வாங்கி விடலாம் என என்னிடம் தெரிவித்தார்.அதனை நம்பி கையெழுத்து போட்டோம். ஆனால், ராதாகிருஷ்ணன் நிலத்தை அடக்கு வைக்காமல் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.அதில், துரைசாமியின் மகள்களான ரீமா, சீமா, விமலா ஆகியோரின் கையெழுத்துகளை பெறவில்லை. நிலத்தை வாங்கிய நபர், எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.எனவே, உரிய விசாரணை செய்து, மோசடியாக நிலத்தை விற்ற மகன் ராதாகிருஷ்ணன் மீதும், நிலத்தை வாங்கியவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ