உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உளுந்துார்பேட்டை : தியாகதுருகம் ஒன்றியத்துக்குட்பட்ட எறஞ்சி, ஆசனுார், கூந்தலுார், காச்சகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.விவசாய நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் போக்கை கண்டித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தென்னிந்திய பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாலை எறஞ்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை