உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மீது கார் மோதல் ரியல் எஸ்டேட் அதிபர் பலி

லாரி மீது கார் மோதல் ரியல் எஸ்டேட் அதிபர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இறந்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ராஜேந்திர ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் பிரான்சிஸ்,54; அரியலுார் மாவட்டம், செந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார்,55; இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இருவரும் நேற்று காலை 'ரெனால்ட் ட்ரிப்பர்' காரில், சென்னையில் இருந்து அரியலுாருக்கு புறப்பட்டனர். காரை, பீட்டர் பிரான்சிஸ் மகன் நவீன், 23; ஓட்டினார்.காலை 7:00 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பாலி அருகே வந்தபோது, முன்னால் சென்ற பதிவு எண் இல்லாத புதிய லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாதயமடைந்த பீட்டர் பிரான்சிஸ், நவீன் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ