உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளியூர் செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

வெளியூர் செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

சங்கராபுரம், - சங்கராபுரம் பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறு சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:சங்கராபுரம் பகுதியில் கோடை விடுமுறையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் இரவு ரோந்து செல்லும் போது அந்த வீட்டை போலீசார் கண்காணிக்க முடியும். இதன் முலம் திருட்டைத் தடுக்க முடியும். எனவே, சங்கராபுரம் பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் முலம் குற்ற சம்பவங்கள் நடக்கும்போது குற்றவாளிகளை சுலபமாக கண்டறிய முடியும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ