உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண்வளம் மேம்பட பல பயிர் சாகுபடி செய்ய வேண்டுகோள்

மண்வளம் மேம்பட பல பயிர் சாகுபடி செய்ய வேண்டுகோள்

சங்கராபுரம், : மண்வளம் மேம்பட பல பயிர் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி செய்திக்குறிப்பு:பல பயிர் என்பது ஒரே வயலில் ஒரே சமயத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒவ்வொன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் மண் வளம் பெருகும்.பொதுவாக தானியங்களில் 2 வகை ,எண்ணெய் வித்துகளில் 2 வகை, பயறு வகைகளில் 2 வகை, பசுந்தாள் ஒரு வகை ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் 7 கிலோ விதை ஒரு ஏக்கருக்கு போதுமானது.எள், சோளம், ஆமணக்கு, தட்டைபயிர், அகத்தி, கொள்ளு, கேழ்வரகு, உளுந்து, கடலை, சூரியகாந்தி, பச்சை பயிர், தினை, வரகு, சாமை, மக்காசோளம் போன்றவை பல பயிர் சாகுபடிக்கு உகந்தவை ஆகும். பருவ பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்கும் மாதிரியை பயன்படுத்தி பல பயிர்களை பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது, அடுத்த பயிருக்கு உரமாக்குவது சிறந்ததொரு தொழில் நுட்பம். எனவே சங்கராபுரம் பகுதி விவசாயிகள் மண்வளம் மேம்பட பலபயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்