| ADDED : மே 15, 2024 11:53 PM
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம்ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்ற மாணவர் பரத் 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.அதேபோல், மாணவர் விக்னேஷ்வரன் 476 மதிப்பெண்களும், கணித பாடத்தில் சென்டமும் பெற்றுள்ளார். மாணவிகள் வைஷ்ணவி, யஷ்வந்த்ரா ஆகியோர் 476 மதிப்பெண்கள் பெற்றனர். 7 பேர் 450க்கு மேலும், 13 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இது குறித்து ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி கூறியதாவது: கல்வி மட்டுமின்றி, விளையாட்டு, வாழ்வியல், பொது வாழ்வு ஆகியவற்றையும் சேர்த்து கற்பிக்கும் ஆர்.கே.எஸ்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 14 வருடங்களாக 100 சதவீத தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக உள்ளது என கூறினார்.சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், பள்ளி தலைவர் மணிவண்ணன், தாளாளர் திருஞானசம்பந்தம், துணைத்தலைவர் நளினி, செயலாளர் கோவிந்தராஜூ, பள்ளி முதல்வர் தனலட்சுமி, துணை முதல்வர் உலகநாதன் ஆகியோர் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.