உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூரை வீடு எரிந்து சேதம்

கூரை வீடு எரிந்து சேதம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின் கசிவால் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் காசிமணி, 70. இவரது வீடு நேற்று மாலை 5:00 மணியளவில் மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில், பீரோ, கட்டில், துணி மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமடைந்தது.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ