உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் அபேஸ்

முதியவர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் அபேஸ்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஏ.டி.எம்., மையத்தில் முதியவரிடம் கார்டை மாற்றிக் கொடுத்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேல், 62; விவசாயி. நேற்று மதியம் திருக்கோவிலுார் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றார்.அங்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணம் எடுத்துத் தருவதாக கூறி ஏ.டி.எம்., கார்டை வாங்கி இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் நடித்து கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து நழுவினார்.சிறிது நேரத்தில் சித்திரைவேல் வங்கிக் கணக்கில் இருந்து 22 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திரைவேல் திருக்கோவிலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ