உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகலுார் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிஎண்15 யு2111 என்ற பதிவெண் கொண்ட லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். அப்போது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து, போலீசார் சென்று பார்த்ததில், லாரியில் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிந்தது.தொடர்ந்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, லாரி உரிமையாளர் பாலசுப்ரமணியன்,45; டிரைவர் பிரபாகரன் மகன் பிரகாஷ்,31; ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை