உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கைலாசநாதர் சுவாமி கோவில் புனரமைப்புக்கான சிறப்பு பூஜை

கைலாசநாதர் சுவாமி கோவில் புனரமைப்புக்கான சிறப்பு பூஜை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கைலாசநாதர் சுவாமி கோவில் புனரமைப்புக் கான பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடந்தது.உளுந்துார்பேட்டையில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தி 29 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்நிலையில் இந்தக் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பொதுமக்கள், அறங்காவலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் ரூ. 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதனைத் தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த புனரமைப்பு பணிகளுக்கான சிறப்பு பூஜை, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சாரதா வித்யாலயா பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.. பூஜையை துவக்கி வைத்தார்.நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, நகராட்சி துணை சேர்மன் வைத்தியநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ் வரவேற்றார். சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் டேனியல்ராஜ், ராஜேஸ்வரிசரவணன், கலா, செல்வகுமாரி, மனோபாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்