உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்ரீ லட்சுமி வித்யாலயா பள்ளி 98.7 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீ லட்சுமி வித்யாலயா பள்ளி 98.7 சதவீதம் தேர்ச்சி

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் ஸ்ரீ லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 98.7 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 155 பேரில் 153 பேர் தேர்ச்சி பெற்றனர். 98.7 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி ரேவதி 572, சோனியா 571, சவுந்தர்யா 569 மதிப்பெண் எடுத்து சிறப்பிடம் பிடித்துள்ளனர். மாணவி ஆஷிபாபானு கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜா சுப்ரமணியம், முதல்வர் பரணி, நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி