மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
சிறுபாக்கம் : மனைவி ஆசிரியராக வேலை செய்யும் தனியார் பள்ளியின், பஸ் கண்ணாடியை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈயனுாரை சேர்ந்தவர் மருதை,54; தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவர், நேற்று காலை 8:30 மணிக்கு, சிறுபாக்கம் அடுத்த ஜா.ஏந்தலில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.அப்போது, குடிபோதையில் வந்த நபர், பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைக்கப் போவதாகவும், மாணவர்களை வெளியேறுமாறு மிரட்டினார். மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும், கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் பஸ்சின் முன்பக்க கண்ணாடிடை அடித்து நொறுக்கினார்.தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் வந்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஜா.ஏந்தலை சேர்ந்த பாலசுப்ரமணியன், 44, என்பதும், அவது மனைவி அருள்செல்வி, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதும், அவர் வேலைக்கு செல்வது விரும்பாமல் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது.இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago