உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் துர்கா தேவி மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முருக்கம்பாடி ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் சஞ்சய், 26; என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர், 50 கிராம் கஞ்சா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடன் அவற்றை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து சஞ்சய்யை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை